காந்தியக் காதலன்
July 20, 2013
சல்லடை ஒன்றை
செவியில் இருத்தி
என் பேச்சுக்களுக்கு மட்டும்
செவிடாகி விடுகிறாள்..என்
சோகக் கதை கேட்க
என் தோழன் என்ன பாவம் செய்தான்!
வாய் மூடிக் கொள்கிறேன்!
அவள் முகமலரும் போது
கண்கள் ரசித்துவிட்டு
கண்ணீருக்கு வழிவிட்டது
முகம் முறைக்கும் போது..
என் தோழன் அழவேண்டாம் என்று
கண்மூடிக் கொள்கிறேன்!
என் பெயரை அவள் கூறக்
காத்துக் கொண்டே இருந்தேன்..
நிராசையான ஆசைகளோடு
மற்றவருடன் அவள் பேசிய
செஞ்சொற்களும் கடுஞ்சொற்களாக
செவிகளுக்கும் விடைகொடுக்கிறேன்!
கண்ணிருந்தும் பார்க்கவில்லை,
செவியிருந்தும் கேட்கவில்லை,
வாயிருந்தும் வார்த்தைகளில்லை,
மூன்று குரங்குகளைப் போல நானும் காந்தியன்!